முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜே.வி.பியை எச்சரித்ததா இந்தியா : சீனாவால் அச்சுறுத்தல் – செய்திகளின் தொகுப்பு

“சீனாவுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டாம் என இந்தியா எம்மிடம் கூறவில்லை.அது பற்றி பேச்சு நடத்த நாமும் முற்படவில்லை.எனினும், பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களுக்கு
அனுமதியளிக்கமாட்டோம் என்பதை நாம் கூறினோம்” என தேசிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து
வெளியிட்ட  போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பி்ட்டுள்ளார்.

மேலும், “இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்பின்போது அரசியல், பொருளாதாரம்
உள்ளிட்ட காரணிகள் பற்றி பேசப்பட்டாலும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலேயே
கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

பூகோள அரசியல் போட்டியால் பிராந்திய பாதுகாப்புக்கு சிற்சில அச்சுறுத்தல்கள்
உள்ளன.

இது தொடர்பில் அவர் (இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) தரப்பில் கூடுதல்
அவதானம் செலுத்தப்பட்டது.

இதன்போது எமது நாட்டின் இறைமையை பாதுகாத்துக்கொண்டு, பிராந்திய
பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் நடவடிக்கைகளுக்கு
இடமளிக்கப்படமாட்டாது என நாம் கூறினோம்.” எனவும் தெரிவித்துள்ளார். 

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு……

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பணிப்புறக்கணிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பணிப்புறக்கணிப்பு

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்