முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டுதலே அனர்த்தங்களை ஏற்படுத்துகின்றது!

இந்திய கடற்றொழிலாளர்கள் தமது கடற்பரப்பை தாண்டி இலங்கை கடற்றொழிலாளர்களின் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள் நுழைவது அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக கடற்தொழில்
நீர்வளத்துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 

வடமராட்சிக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் மீது
இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில்
கருத்துத் தொரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,”இலங்கை இறைமையுள்ள நாடு அதன் கடல் எல்லைகள்
வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக கடற்றொழில் ஈடுபட்டு எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து
வருகின்றார்கள்.

துப்பாக்கிச் சூடு 

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை காங்கேசன் துறைக் கடற்பரப்பில் இந்தியா
மீனவர்கள் அத்துமீறி வருகை தந்து மீன்பிடியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அவர்களை கைது செய்வதற்காக கடற்படையினர் சுற்றிவளைத்து அவர்களின் படகுகுக்குள்
கடற்படையினர் ஏறியுள்ளனர்.

இவ்வாறு ஏறிய கடற்றொழிலாளர்களை படகுடன் இழுத்துச் செல்வதற்கு இந்திய கடற்றொழிலாளர்கள் தயாரான போது கடற்படையினர் தடுத்து நிறுத்துவதற்காக துப்பாக்கி பிரயோகம்
செய்தனர்.

இந்திய அத்துமீறிய கடற்றொழில் விவகாரம் இன்று நேற்று உருவானது விடயம் அல்லை பல
வருடங்களாக நீடித்து வரும் பிரச்சினை.

இந்த பிரச்சனைக்கு எமது ஆட்சியில் தீர்வை காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் மக்களை தொடர்ச்சியாக கண்ணீர் விட வைக்க முடியாது.

நாங்கள் பலமுறை இந்திய கடற்றொழிலாளர்களை தயவாகக் கேட்டுள்ளோம். அத்துமீறி இலங்கை கடல்
எல்லைக்குள் கடற்றொழிலில் ஈடுபடாதீர்கள். எமது கடற்றொழில் மக்களின் வாழ்வாதாரத்தை
அழிக்காதீர்கள் என்று.

இழுவைப் படகுகள் 

அண்மையில் கூட நெடுந்தீவு மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் இந்திய இழுவைப்
படகுகள் அத்து மீறி உள் நுழைந்து அப்பகுதி கடற்றொழிலாளர்களின் வலைகளை
நாசப்படுத்தியதுடன் அவர்களை பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களாக ஆக்குகின்றனர்.

நான் அந்த பகுதிக்கு விஜயம் சென்றபோது மக்கள் கண்ணீர் மல்க இந்திய இழுவைப்
படகுகளை நிறுத்துங்கள் எங்களால் வாழ முடியாது உள்ளது என கூறுகிறார்கள்.

இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டுதலே அனர்த்தங்களை ஏற்படுத்துகின்றது! | Indian Fishermen Crossing Border Issue

எமது கடற்றொழிலாளர்களின் இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்கள் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை
எக்காரணத்தினாலும் அனுமதிக்க முடியாது.

எமது இலங்கை கடற்படை தமது கடல் எல்லையை பாதுகாப்பதற்காக கண்காணிப்பு
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அத்துமீறும் இந்திய கடற்றொழில் பிடிப்
படகுகளை கைது செய்வது வழமையான செயற்பாடு.

கைது நடவடிக்கைகளில் ஒத்துழைக்காத படகுகளை துரத்தும் போது சில அசம்பாவிதங்கள்
கடலில் ஏற்படுகின்றன. இவை கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளன.

ஆகவே, இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டாது கடற்றொழிலில் ஈடுபடுவது
தேவையற்ற அனர்த்தங்களை தவிக்கும்” என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.