Home இலங்கை சமூகம் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: பதிவுசெய்யப்பட்டுள்ள முறைப்பாடு

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: பதிவுசெய்யப்பட்டுள்ள முறைப்பாடு

0

இந்திய (India) கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் சொத்து இழப்புக்கள் தொடர்பாக அனலைதீவு (Analaitivu)  கடற்றொழிலாளர்களினால் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடானது ஊர்காவல்துறை காவல் நிலையத்தில் இன்றையதினம் (24.11.2024) பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்

இந்திய கடற்றொழிலாளர்களால் அனலைதீவு கடற்பரப்பில் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை மற்றும் இழப்பீடுகள் ஏற்படுகின்றமை தொடர்பில் அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் என்பன இணைந்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

இதேவேளை இலங்கை (Sri Lanka) கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்தக் கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் கடந்த 21ஆம் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/indian-fishermen-s-encroachment-1732450291

NO COMMENTS

Exit mobile version