Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு மக்களுக்கு கிடைத்த இந்திய அரசின் வீட்டுத்திட்டம்

முல்லைத்தீவு மக்களுக்கு கிடைத்த இந்திய அரசின் வீட்டுத்திட்டம்

0

இந்திய அரசாங்கத்தின் உதவியின் முல்லைத்தீவு மாவட்டத்திd் கேப்பாப்புலவு
பிலவுக்குடியிருப்பு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘சந்திரன் கிராமம்’
வீடுகள் கையளிப்பு நிகழ்வானது இன்றைய தினம்(28) பி.ப 4.00 மணியளவில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்
தலைமையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நகர
அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக
மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்களிப்புடன் நிகழ்வு நடைபெற்றது.

24 வீடுகள் கையளிப்பு

குறித்த சந்திரன் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் இந்திய
அரசாங்கத்தின் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் இலங்கைக்கான
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களால் இன்றையதினம்
கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்

இந்த கையளிப்பு நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், நகர
அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்
எம்.எம்.நஷிமுதீன்,தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் அரவிந்த ஸ்ரீநாத்,
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச
செயலாளர், கிராம அலுவலகர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட
பலர் கலந்துகொண்டனர்.   

    

NO COMMENTS

Exit mobile version