கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகளவான குஷ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தினுடாகச் சந்தேகநபர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று பயணிகள் வருகை முனையத்தின்
ஊடக வெளியேற முற்பட்ட சந்தேகத்துக்கிடமான பயணி ஒருவரைச் சுங்கப் பிரிவு
அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது அந்த நபரின் பயணப் பொதியினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10
கிலோ 750 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கைதான நபர் 24 வயதுடைய இந்தியப் பிரஜை என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் விமான நிலையப் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
