Home இந்தியா பதவியை துறந்த இந்தியத் துணை ஜனாதிபதி – பறந்த அவசர கோரிக்கை

பதவியை துறந்த இந்தியத் துணை ஜனாதிபதி – பறந்த அவசர கோரிக்கை

0

இந்தியத் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் (Jagdeep Dhankhar) தனது பதவி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கையை ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பதிவில் மேலும் குறிப்பிடுகையில், குடியரசுத் துணைத் தலைவர் தன்கரின்  திடீர் பதவி விலகல் புரிந்து கொள்ள முடியாத அதிர்ச்சியாக உள்ளது.

மறுபரிசீலனை செய்ய வேண்டும்

நீதித்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை இன்று அவர் வெளியிட இருந்தார்.

உடல் நிலையில் தன்கர் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இருப்பினும், இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பழம்பெரும் தலைவர்

இந்தியத் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உடல்நலக் குறைபாடு மற்றும் மருத்துவ பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தைக் காரணம் காட்டி அவர் பதவி விலகலை அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தனது பதவி விலகல் கடிதத்தை அவர் அளித்துள்ளார்.

இந்நிலையில் புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சர்ச்சைகளில் சிக்காத ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என நம்புவதாக என பா.ஜ.க. தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த பதவிக்கு, பழம்பெரும் தலைவர் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது  

[USIXHPI
]

NO COMMENTS

Exit mobile version