Home இலங்கை சமூகம் இலங்கை நோக்கி படையெடுக்கும் இந்தியர்கள்

இலங்கை நோக்கி படையெடுக்கும் இந்தியர்கள்

0

இந்த மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 40,047 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

சுற்றுலாப்பயணிகள்

இதற்கமைய, நடப்பாண்டின் குறித்த காலப்பகுதி வரையில் மாத்திரம், 14 இலட்சத்து 8,335 சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 

அவர்களில் அதிகளவானோர், இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version