முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கச்சதீவு தொடர்பில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தகவல்

கச்சதீவை காங்கிரஸ் கட்சி எப்படி தாரை வார்த்து கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டுள்ளன என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கச்சதீவு பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவலை குறிப்பிட்டு பிரதமர் மோடி எக்ஸ் சமூக தளத்தில் பகிர்ந்துள்ளார்.

வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் தமிழ் மக்கள் : சம்பந்தன் சுட்டிக்காட்டு

வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் தமிழ் மக்கள் : சம்பந்தன் சுட்டிக்காட்டு

காங்கிரஸ் கட்சி

அதில், கச்சதீவை காங்கிரஸ் கட்சி எப்படி தாரை வார்த்து கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன என தெரிவித்துள்ளார்.

கச்சதீவு தொடர்பில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தகவல் | Information By India Pm Modi Regarding Kachatheevu

இந்த விடயம் ஒவ்வோர் இந்தியனையும் ஆத்திரப்படுத்தி உள்ளது.

காங்கிரசை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்று மக்களின் மனங்களில் பதியும் வகையில் மற்றொரு விடயம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் வகையில், 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பணியாற்றும் விதம் தொடர்ந்து வருகிறது என அவர் பதிவிட்டு உள்ளார்.

சீனாவின் விமானத்தில் நாடு திரும்பிய பிரதமர்

சீனாவின் விமானத்தில் நாடு திரும்பிய பிரதமர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்