Home இலங்கை சமூகம் மீண்டும் கூடும் தேசபந்து தொடர்பான விசாரணைக்குழு

மீண்டும் கூடும் தேசபந்து தொடர்பான விசாரணைக்குழு

0

தேசபந்து தென்னகோனின் (Deshabandu Tennakoon) அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு மீண்டும் கூடவுள்ளது.

அதன்படி, சாட்சிகளின் வாக்குமூலங்கள் தொடர்பாக பிரதிவாதி தரப்பின் நிலைப்பாடு இன்று (09) முன்வைக்கப்பட உள்ளது.

சாட்சிகளின் வாக்குமூலம்

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் சமீபத்தில் சாட்சிகளின் வாக்குமூலங்களை பிரதிவாதி தரப்பிற்கு வழங்கினர்.

மேலும் பிரதிவாதிகள் நாடாளுமன்றத்திற்கு வந்து இரு தரப்பினரின் ஒப்புதலுடன் மேலும் இரண்டு சாட்சிகளின் வாக்குமூலங்களை ஆய்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இதேவேளை, உயர் பதவிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் (Sri Lanka Police Headquarters) தெரிவித்துள்ளது.

இதன்படி, தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நிமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version