Home இலங்கை சமூகம் செம்மணிக்கு சுயாதீன தடயவியல் தேவை! சிறிலங்காவுக்கு ஐ.நா ஆணையாளர் எரிச்சல் செய்தி

செம்மணிக்கு சுயாதீன தடயவியல் தேவை! சிறிலங்காவுக்கு ஐ.நா ஆணையாளர் எரிச்சல் செய்தி

0

மறக்கப்பட முடியாத ஒரு கடந்த காலம் செம்மணியில் புலப்படுவதால் அந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வுகளுக்கு அனைத்துலக தடயவியலாளர்களின் பிரசன்னம் தேவையென நேற்று (25) செம்மணியில் வைத்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) தெரிவித்துள்ளார்.

இது சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களின் உதிரப்பழிசார்ந்த சர்வதேச அழுத்தத்தைக் குறைப்பதற்காக நகர்த்தும் புதிய தந்திரங்களுக்கு ஒரு பாதக செய்தியை வழங்கியுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பரில் ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானகரமான ஒரு நிகழ்ச்சி நிரல் எதிர்பார்க்கபடும் நிலையில் இந்த நிகழ்சி நிரலை ஜெனிவாவில் (Geneva) இருந்து அகற்ற அநுரகுமார திசாநாயக்கா (Anura Kumara Dissanayake) அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கிறது.

இந்த நிலையில் அகாலமாக குரூரத்துடன் கொன்று புதைக்கப்பட்ட தமிழ் மாந்தர்களின் உடல்கள் அடங்கியுள்ள செம்மணிக்கு சென்று மலர்துர்வி அஞ்சலித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர், செம்மணி போல அட்டூழியங்களால் உருவாக்கப்பட்ட இடங்களை தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களேஅகழ்வு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டமை சிறிலங்கா அரசாங;கங்கள் தொடர்ந்தும் நிராகரித்துவரும் அனைத்துலக விசாரணைப்பொறி முறையின் அவசியத்தையும் எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் இந்த விடயங்களுடன் ஈரான் தற்போது தனது மண்ணில் தீவிரப்படுத்தியுள்ள மொசாட் உளவாளிகளின் வேட்டை குறித்தும் ஈரான் மீதான அமெரிக்காவின் ஒபரேஷன் மிட்நைற் ஹமர் தாக்குதல் தொடர்பாக புதிய பரப்ப்பான விடயங்களையும் தாங்கிவருகிறது இன்றைய செய்திவீச்சு…..

https://www.youtube.com/embed/7gL2hz1R1FM

NO COMMENTS

Exit mobile version