கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில், திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை கப்பல்துறையில் பணியாற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
கடந்த வருடம் ஜூன் 26 ஆம் திகதி அன்று, இலங்கை கடற்படை 48 கிலோகிராம் 880 கிராம் ஹெராயின் மற்றும் 142 கிலோகிராம் 184 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு கப்பலில் இருந்து ஆறு உள்ளூர் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கடற்படை புலனாய்வு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
