முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விறுவிறுப்பான ஐபிஎல் தொடர்: முழு போட்டி அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ

ஐபிஎல் 2024 தொடரின் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2024 தொடரானது கடந்த 22 ஆம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் ஆரம்பமாகியது.

ஐ.பி.எல். நடைபெற்று வரும் சமயத்தில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால்
இதனை கருத்தில் கொண்டு 17 நாட்களுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது.

அதில் 21 போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் திகதி வரை நடைபெற உள்ளன.

இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு 1 லட்சம் ரூபா சம்பள உயர்வு..! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

அரச ஊழியர்களுக்கு 1 லட்சம் ரூபா சம்பள உயர்வு..! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

முழு அட்டவணை

அதன்படி 2வது கட்ட போட்டிகள் ஏப்ரல் 8 திகதி முதல் மே 26-ம் திகதி வரை நடைபெற உள்ளன.

2வது கட்டத்தின் முதல் போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே நடைபெற உள்ளது.

2024 ipl full schedule

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

லீக் போட்டிகள் மே 19-ம் திகதியுடன் முடிவடைய உள்ளன.

பிளே ஓப் சுற்றில் தகுதிகாண் போட்டிகள் மே 21 திகதியும், தகுதி நீக்க போட்டிகள் 22ஆம் திகதியும் நடைபெற உள்ளது.

தகுதிகாண் 2 மே 24ஆம் திகதியும், இறுதிப்போட்டி மே 26ம் திகதியும் நடைபெற உள்ளன.

மேலும் தகுதிகாண் போட்டிகள் 1 மற்றும் தகுதி நீக்க போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், தகுதிகாண் போட்டிகள் 2 மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுக்குள் புகுந்த பயங்கரவாதிகள்! முகம் சிதைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலை

ரஷ்யாவுக்குள் புகுந்த பயங்கரவாதிகள்! முகம் சிதைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்