Home விளையாட்டு மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் : வெளியானது அறிவிப்பு

மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் : வெளியானது அறிவிப்பு

0

இந்திய – பாகிஸ்தான் போர் பதற்றத்தை அடுத்து காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) வெளியிட்ட அறிவிப்பில்,TATA IPL 2025 தொடரை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

6 இடங்களில் போட்டிகள்

மே 17 முதல் மொத்தம் 17 போட்டிகள் 6 இடங்களில் நடைபெறவுள்ளன. இதில் இரண்டு ஞாயிறுகளில் இரட்டைப் போட்டிகளும் இடம்பெற உள்ளன.

போட்டிகளுக்கான இடங்கள்

பிளேஒஃப் சுற்றுகள் தொடர்பான விபரங்கள் வருமாறு: குவாலிபையர் 1 – மே 29, எலிமினேட்டர் – மே 30, குவாலிபையர் 2 – ஜூன் 1, மற்றும் இறுதிப்போட்டி – ஜூன் 3 அன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகளுக்கான இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என BCCI தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version