Home உலகம் ஈரானில் வேட்டையாடப்படும் மொசாட் உளவாளிகள்

ஈரானில் வேட்டையாடப்படும் மொசாட் உளவாளிகள்

0

ஈரானின் லோரஸ்தான் மாகாணத்தில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் ஐந்து உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

இவர்கள் சமூக ஊடகங்களில் திட்டமிட்ட முறையில் செயல்பட்டு, பொதுமக்களிடையே பயத்தை விதைத்து, இஸ்லாமிய குடியரசின் புனித அமைப்பின் மதிப்பை கெடுக்க முயன்றதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக தற்போதைய பிராந்திய மோதலுக்கிடையில், இணைய பயன்பாட்டில் தற்காலிக கட்டுப்பாடுகளை ஈரான் அரசு விதித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உறுதியான ஆதாரங்கள் 

இதன் பின்னணியில், பல்வேறு இணையதளங்கள் மற்றும் செயலிகள் அணுகமுடியாத நிலையில் உள்ளன.

முன்னதாகவும், உளவுச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி பலரை ஈரான் கைது செய்ததற்கான முறைப்பாடுகள் எழுந்துள்ளன.ஆனால் பெரும்பாலான சந்தேகங்களுக்கு உறுதியான ஆதாரங்கள் வழங்கப்படவில்லை என்ற விமர்சனங்களும் தொடருகின்றன.

 

NO COMMENTS

Exit mobile version