Home உலகம் அதிகரிக்கும் பதற்றம் : அதிரடியாக திருப்பி விடப்பட்ட 16 இந்தியா விமானங்கள்

அதிகரிக்கும் பதற்றம் : அதிரடியாக திருப்பி விடப்பட்ட 16 இந்தியா விமானங்கள்

0

ஈரான் (Iran)  – இஸ்ரேல் (Israel) வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து 16 ஏர் இந்திய விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களினால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் (Iran) தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது.

இஸ்ரேல் தாக்குதல்

இந்த தாக்குதலினால் பதற்றம் நிலவிவரும் சூழ்நிலையில், ஈரானின் முக்கிய இராணுவ தலைவர்கள் சிலரும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தனர். 

மேலும், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலின் மீது சுமார் 100 டிரோன்களை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தற்போது இந்த அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏர் இந்திய விமானங்கள்

இந்த நிலையில், ஈரான் – இஸ்ரேல் வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து 16 ஏர் இந்திய விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எயார் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் , “இந்த எதிர்பாராத இடையூறு காரணமாக எங்கள் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.

மேலும் பயணிகளுக்கு தங்குமிடம் வழங்குவது உட்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version