கங்குவா
சிறுத்தை சிவா-சூர்யாவுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து இயக்கிய படம் கங்குவா.
பாலிவுட் பிரபலங்களான திஷா பதானி மற்றும் பாபி தியோல் என பலர் நடித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியானது. ரூ. 300 முதல் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியானது.
நஷ்டம்
படம் வெளியான நாள் முதல் நிறைய மோசமான விமர்சனங்கள் தான் வெளிவந்தன. படத்தின் நேரம், பின்னணி இசை என நிறைய விஷயங்கள் மைனஸாக பார்க்கப்பட்டது.
ஹிந்தியில் வெளியான பேபி ஜான் படத்தால் அட்லீக்கு இத்தனை கோடி நஷ்டமா?
ஆனால் ஒரு வித்தியாசமான படைப்பை உருவாக்கியதற்கு பலர் தங்களது வாழ்த்தை கூறி வந்தாலும் படம் சரியான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெறவில்லை.
சரியாக படம் வசூல் செய்யாததால் படத்தை தயாரித்த ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவுக்கு ரூ. 143 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.