கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன், இவருக்கு என்று ஒரு அறிமுகம் தேவையா என்ன.
தனது 5 வயதில் சினிமா என்றால் என்ன என்பதே தெரியாமல் ஆரம்பித்த பயணம் இப்போது ஒட்டுமொத்த இந்திய சினிமா திரும்பி பார்க்கும் அளவிற்கு ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், கணக்கில்லா மொழிகளில் படங்கள், நூற்றுக்கணக்கான விருதுகள் என்று அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளார்.
இவரது சினிமா பயணத்தில் வெற்றியின் உச்சத்தில் ஏற்றமும், சொல்ல முடியா தோல்வியும் உள்ளது. ஆனால் எப்போதுமே கலைக்கான தனது பயணத்தை அதே வேகத்துடன் தொடர்ந்து கொண்டே வருகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியாகி பட்டய கிளப்பியது.
பிட்னஸ் சீக்ரெட்
70 வயதிலும் இளைஞர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் இப்போதும் தனது உடலை பிட்டாக வைத்துக்கொண்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
அப்படி அவரின் பிட்னஸ் சீக்ரெட் என்ன என்பதை காண்போம். காலை 5 முதல் 5.30 மணிக்கு எழுந்திருப்பவர் முதலில் ஆக்சிஜன் மீட்டரை எடுத்து தனது நாடித்துடிப்பை அறிந்துகொள்வாராம்.
அடுத்து முக்கியமான உடற்பயிற்சிக்கு முன் சில Stretches, பின் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்தவர் காபியுடன் சில உலக செய்திகளை படிப்பாராம். தேவையான சத்துக்களை உடைய குறைந்த அளவிலான உணவுகளை மட்டுமே உண்டு அந்த நாளுக்கான பணிகளை செய்வாராம்.