விஜய்யின் ஜனநாயகன் படம் வரும் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பொங்கல் ஸ்பெஷலாக இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
மேலும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் பொங்கல் ரேஸில் இருக்கும் நிலையில் அந்த படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது அந்த தேதியில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதாம்.
தேதி இதுவா?
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் பராசக்தி படத்தை ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வந்திருக்கிறது.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் பராசக்தி படத்தை ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய் திமுக-வை அதிகம் விமர்சித்து பேசி இருந்த நிலையில், இன்று பராசக்தி ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக செய்தி வந்திருக்கிறது.
இருப்பினும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.
