Home இலங்கை குற்றம் இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

0

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஷாரா செவ்வந்தி பயன்படுத்திய தொலைபேசி இலக்கத்தின் அழைப்புகள் குறித்த தகவல்கள் மூலம் இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ள பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களும் இஷாராவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர்.

பொலிஸார் மறுப்பு 

அது தொடர்பான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக குறித்த நபர்களின் பெயர்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என்று பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும் எதிர்வரும் நாட்களில் இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட சிலர் கைதாகும் சாத்தியம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version