பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கடத்தும் ஒரு வலையமைப்பை கொழும்பு குற்றப்பிரிவு அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வலையமைப்பு, இந்தியாவில் இருந்து கடல் வழியாக கேரள கஞ்சாவை நாட்டிற்கு கொண்டு வரும் குழுவுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.
இந்த குழுவின் தலையீட்டால் கடந்த சில ஆண்டுகளில் சக்திவாய்ந்த குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் உட்பட சுமார் 100 பேர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழுவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
படகு மூலம் இந்தியாவிற்கு கடத்தல்
அவர்களின் சகோதரர்களில் மூத்தவரான ஆனந்தன், இந்தக் குழுவின் மூளையாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று அல்லது நாளை அவர் கைது செய்யப்படுவார் என்று கொழும்பு குற்றப்பிரிவு நம்பப்படுகின்றது.
இஷாரா உட்பட மூன்று பேரை ஆனந்தன் படகு மூலம் இந்தியாவிற்கு கடத்தியதாக தெரியவந்துள்ளது.
இஷாரா யாழ்ப்பாணத்தில் உள்ள அரியாலையில் இருந்து படகு மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அந்த பணத்தை ஜே.கே. பாய் என்ற நபர் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
இஷாரா செவ்வந்தி படகில் இந்தியா செல்வதற்கு முன்பு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் ஆனந்தன் என்ற கடத்தல்காரருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளில் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இஷாராவிற்கு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் தங்குமிடம் வழங்கி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவிய நான்கு பேர் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செவ்வந்தி சென்ற படகு அடையாளம்
இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு சென்ற படகும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,படகும் வழக்குப்பொருள் என பொலிஸார் காவலில் எடுக்க உள்ளனர்.
குறித்த சகோதரர்களின் பாதுகாப்புடன் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு ஜே.கே. பாய் மற்றும் சிலோன் பாய் ஆகியோர் இந்தியாவில் தங்குமிடம் மற்றும் வசதிகளை வழங்குகின்றமை தெரியவந்துள்ளது.
நேபாளத்தில் பிடிப்பட்டு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டவர்களில் ஜே.கே. பாய் என்பவரும் உள்ளடங்கியுள்ளதுடன், சிலோன் பாய் தொடர்பாகவும் விசாரணைகள் நடந்து வருவதாக கூறப்படுகின்றது.
இஷாரா செவ்வந்தி பிடிபட்டபோது சிலோன் பாய் நேபாளத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது.
ஜே.கே. பாயை போலவே சிலோன் பாய்
ஜே.கே. பாயைப் போலவே, சிலோன் பாய் டுபாயிலிருந்தும் மனித கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பூட்டான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவுகளில் உள்ள மனித கடத்தல்காரர்களுடன் அவர்களுக்கு மிக நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தல்காரர்கள் ரூ.100,000 முதல் ரூ.100,000 வரை பணம் வசூலிப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தங்குமிடம் வழங்கவும், வேறு நாட்டிற்கு தப்பிச் செல்ல தேவையான வசதிகளை வழங்கவும் 2 மில்லியன் ரூபாய் மற்றும் அதற்கு மேல் பணம் வசூலிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவின் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் உள்ள ஜே.கே. பாய், இது தொடர்பாக பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
