Home இலங்கை குற்றம் செவ்வந்தி கும்பலிடம் யாழ் தக்சி சிக்கியது ஏன்….! நேபாளம் சென்றமைக்கான காரணம் அம்பலம்

செவ்வந்தி கும்பலிடம் யாழ் தக்சி சிக்கியது ஏன்….! நேபாளம் சென்றமைக்கான காரணம் அம்பலம்

0

கணேமுல்ல சஞ்சீவாவின் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்திக்கு கடவுச்சீட்டு தயாரிப்பதற்காகவே யாழ்ப்பாண பெண் தக்சி நேபாளத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இஷாரா செவ்வந்தியால் நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட போலி துருக்கி கடவுச்சீட்டில் முத்திரையில் பிழை காணப்பட்டுள்ளது.

இதனால் நேபாளம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அந்த கடவுச்சீட்டினை தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

போலி கடவுச்சீட்டு

இதனையடுத்து செவ்வந்தியை போன்று தோற்றமளிக்கும் தக்சி என்ற பெண்ணை இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு ஜே.கே பாய் அழைத்து வந்துள்ளார்.

இதன்போது மற்றொரு போலி கடவுச்சீட்டை தயாரித்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த கடவு்சீட்டை பயன்படுத்தி மற்றொரு போலி கடவுச்சீட்டு உருவாக்கி, துருக்கிக்குச் சென்று பின்னர் மலேசியாவுக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இஷாரா செவ்வந்தி, ஜே.கே. பாய் மற்றும் சிலோன் பாயுடன் நேபாளத்தில் ஒரே அறையில் சுமார் ஒரு மாதமாகத் தங்கியிருந்துள்ளார். பின்னர் செவ்வந்தி வேறொரு அடுக்குமாடி கட்டடத்தில் ஒரு அறைக்குச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version