Home இலங்கை குற்றம் இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது

0

கணேமுல்ல சஞ்சீவ கொலையின்
பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள்
என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை
பொலிஸ் அறிவித்துள்ளதாக தெரிவித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

 சஞ்சீவ படுகொலை

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்  இஷாரா செவ்வந்தி பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டார். 

இந்நிலையில், இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version