இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகை வழங்கிய ஆனந்தன், நீண்ட காலமாக இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கேரள கஞ்சாவை கடத்தி வரும் ஒரு கடத்தல்காரர் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று 10 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்புக்காவல்
குறித்த சந்தேக நபர், கிளிநொச்சியில் வசிப்பவர் என்றும், அவரின் தென்னந்தோப்பில் உள்ள நிலத்தடி பதுங்கு குழியில் கஞ்சா கையிருப்பு சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மேலும், அந்த நபர் கேரள கஞ்சாவை நாட்டிற்கு இறக்குமதி செய்யும் போது பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களை இந்தியாவிற்கு அழைத்துச் சென்றாரா என்பது குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன், சந்தேக நபர் தற்போது 7 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்ககப்படுகின்றது.
