முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேலின் இனப்படுகொலையை அம்பலப்படுத்திய ஐ.நா!

காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) இனப்படுகொலை செய்துள்ளது என ஐ.நா விசாரணை ஆணையகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதாவது, காசாவில் பலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல், இனப்படுகொலையை செய்வதாக ஐநாவின் விசாரணை ஆணையகம் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

இது குறித்து ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனியல் மெரோன் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஹமாஸ் படையினர்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்த அறிக்கை போலியானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலின் இனப்படுகொலையை அம்பலப்படுத்திய ஐ.நா! | Israel Accused Of Gaza Genocide By Un Inquiry

அத்தோடு, ஹமாஸ் படையினரால் எழுதப்பட்டது எனவும் பொய்யான அவதூறுகளை பரப்புகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு துறை

இதையடுத்து, இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகமும் இது தொடர்பில் மற்றுமொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் இனப்படுகொலையை அம்பலப்படுத்திய ஐ.நா! | Israel Accused Of Gaza Genocide By Un Inquiry

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இஸ்ரேலில் இனப்படுகொலைக்கு முயன்றது ஹமாஸ் ஆகும்.

1,200 பேரைக் கொன்றது, பெண்களை தகாதமுறைக்கு உட்படுத்தியது மற்றும் பல்வேறு குடும்பங்களை உயிருடன் எரித்தது.

அத்தோடு ஒவ்வொரு யூதரையும் கொல்லும் இலக்கை ஹமாஸ் படையினர் வெளிப்படையாக அறிவித்தனர்.

பிணைக்கைதி

வேறு எந்த நாடும் இந்தநிலைமைகளில் செயல்பட்டு போர்க்களத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் தீங்குகளைத் தடுக்க இவ்வளவு செய்ததில்லை.

இஸ்ரேலின் இனப்படுகொலையை அம்பலப்படுத்திய ஐ.நா! | Israel Accused Of Gaza Genocide By Un Inquiry

இந்த அறிக்கை ஆதாரமற்றது, இஸ்ரேல் தனது மக்களைப் பாதுகாத்து, பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்டு வர முயற்சிக்கின்றது.

யூத அரசைக் குறை தெரிவிப்பதிலும், ஹமாஸின் அட்டூழியங்களை மூடி மறைப்பதிலும் மற்றும் பாதிக்கப் பட்டவர்களைக் குற்றம் சாட்டப்பட்டவர்களாக மாற்றுவதிலும் ஐநா விசாரணை கமிஷன் நோக்கமாகக் கொண்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்