Home உலகம் லெபனான் தலைநகா் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

லெபனான் தலைநகா் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

0

லெபனான் தலைநகா் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் ஒருவா் உயிரிழந்துள்ளதுடன் 21 போ் படு காயமடைந்துள்ளனர்.

மூத்த ஹிஸ்புல்லா படைத் தலைவரான அலி தப்தாயை குறிவைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா படை 

அத்தோடு, ஹிஸ்புல்லா படை மீண்டும் ஆயுதங்களை ஏந்தக் கூடாது மற்றும் அந்தப் படை மீண்டும் கட்டியெழுப்பப்படக் கூடாது என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனறு அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இந்தத் தாக்குதலுக்கு லெபனான் ஜனாதிபதி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version