Home உலகம் பலஸ்தீனத்தில் பள்ளிவாசல் முகாம் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்: நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி

பலஸ்தீனத்தில் பள்ளிவாசல் முகாம் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்: நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி

0

கிழக்கு காசாவில் (Gaza) மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளிவாசல் மீது இஸ்ரேல் (Israel) நடத்திய வான் வழித் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டடோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பஜர் எனப்படும் பகல் நேர தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது இன்று (10) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒரே வாரத்தில் 04 பள்ளிவாசல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒகஸ்ட் 4 ஆம் திகதி 02 பள்ளிவாசல்கள் மீது நடந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.

கிளர்ச்சியாளர்கள்

அதற்கு முந்தைய நாள் நடாத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தாக்குதல்கள், இந்த பள்ளிவாசல்களில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் ஒளிந்திருப்பதானால் மேற்கொள்ளப்ட்ட தாக்குதல் என இஸ்ரேல் நியாயப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் வரும் ஒகஸ்ட் 15 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/israel-hamas-war-1723267607

NO COMMENTS

Exit mobile version