Home இலங்கை சமூகம் தொடரும் போர் பதற்றம் : ஈரானில் உள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

தொடரும் போர் பதற்றம் : ஈரானில் உள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

0

மத்திய கிழக்கில் போர் மோதல்கள் தொடரும் நிலையில் ஈரானில் (Iran) உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ளது.

ஈரானில் 41 இலங்கையர்கள் இருந்ததாகவும், அவர்களில் நான்கு பேர் இதுவரை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது ஈரானில் 37 இலங்கையர்கள் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சர் வெளியிட்ட தகவல்

அத்துடன் ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பணிபுரியும் ஐந்து அதிகாரிகளும் இந்த எண்ணிக்கையில் அடங்குவதாக அமைச்சு கூறியுள்ளது.

இதேவேளை, ஈரானில் தங்கியிருக்கும் இலங்கையர்களில் நான்கு பேர் நாளை (23) துருக்கி எல்லை வழியாக வெளியேற உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath), ஈரானில் சுமார் 35 இலங்கையர்கள் தங்கியிருப்பதாக தெரிவித்தார்.

அவர்களில் எட்டு பேர் ஈரான் பிரஜைகளுடன் திருமணமாகி வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version