காஸாவில் இருந்து 3 பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் இன்று(22) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
யோனடான் சமிரானோ (21), ஒஃப்ரா கீடா் (70), ஷே லெவின்சன் (19) ஆகியோரின் சடலங்களே தற்போது மீட்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மீட்பு நடவடிக்கை குறித்து இஸ்ரேல் இராணுவம் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.
இதுவரை எட்டு பணயக்கைதிகளின் உடல்கள் மீட்பு
இந்த மாதம் இதுவரை காசாவிலிருந்து எட்டு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) மீட்டுள்ளன.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சபதம்
இதுதொடா்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‘ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் அதேவேளையில், காஸாவில் இருந்து பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையும் தொடா்ந்து நடைபெறுகிறது’ என்றும், “கடத்தப்பட்ட அனைவரையும் – உயிரோடு இருப்பவர்களையும் இறந்தவர்களையும் மீட்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்
