Home உலகம் அமெரிக்காவுடனான முக்கிய பேச்சுவார்த்தைக்கு தடை விதித்த நெதன்யாகு

அமெரிக்காவுடனான முக்கிய பேச்சுவார்த்தைக்கு தடை விதித்த நெதன்யாகு

0

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டின் (Yoav Gallant) அமெரிக்க பயணத்தை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தடுத்துள்ளார்.

கடந்த வாரம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடி தொடர்பில் பேசுவதற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டினை (Lloyd Austinசந்திப்பதற்கு கேலண்டின் திட்டமிடப்பட்ட பயணம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜனாதிபதி ஜோ பைனுடன் தொலைபேசி அழைப்பை பெறும் வரையில் கையொப்பமிட மறுத்ததால் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுக்கு பதிலடி

அத்துடன், கேலண்ட் வெளியேறுவதற்கு முன்பு ஈரானின் தாக்குதலுக்கு திட்டமிடப்பட்ட பதிலடிக்கு பாதுகாப்பு அமைச்சரவை இறுதி ஒப்புதல் பெற வேண்டும் என்றும் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டினை சந்திப்பதற்கான பயணம் ரத்து செய்யப்பட்டமையை பென்டகன் செய்தித் தொடர்பாளர் உறுதிப் படுத்தியுள்ளார்.     

NO COMMENTS

Exit mobile version