Home உலகம் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் மாத்திரமே தெரிந்த அந்த இரகசியம் !

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் மாத்திரமே தெரிந்த அந்த இரகசியம் !

0

ஈரான் (Iran) மீது அதிரடியாக இஸ்ரேல் (Israel) மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்கு இஸ்ரேல் சூட்டியிருந்த பெயர்  Operation Rising Lion.

பொதுவாகவே இஸ்ரேலியர்கள் தமது படை நடவடிக்கைகளுக்குச் சூட்டுகின்ற பெயர்களின் பின்னணியில் பல இரகசியங்கள் மறைந்திருக்கும்.

இந்தநிலையில், தமது இராணுவ நடவடிக்கைகளுக்கு இஸ்ரேலியர்கள் சூட்டுகின்ற பெயர்கள் அந்தப் படை நடவடிக்கைகளின் உண்மையான நோக்கத்தையும் மற்றும் அந்தப் படை நடவடிக்கைகளின் இலக்குகளையும் ஓரு அளவுக்கு வெளிப்படுத்துவதாக இருக்கும்.

பல நாடுகள் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பெயரிடுகின்ற போது ஒன்று தமது தரப்பை உற்சாகப்படுத்தும் படியாக அந்தப் பெயர்களைச் சூட்டுவார்கள்.

இரண்டாவது, எதிரிகளைக் கலங்கடிக்கக்கூடிய ஒரு உளவியல் நடவடிக்கையை அடிப்படையாக வைத்து அந்தப் பெயர்களை வடிவமைப்பார்கள்.

ஒருவேளை அது ஒரு இரகசிய நடவடிக்கையாக இருக்குமேயானால் யாராலும் அந்த நடவடிக்கையை அணுமாணிக்க முடியாத வகையில் சங்கேத மொழியிலும் பெயரை வைப்பார்கள்.

அந்த வகையில் ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட Operation Rising Lion படை நடவடிக்கை, எப்படியான செய்தியைச் செல்லுகின்றது மற்றும் அந்தச் செய்தியை யாருக்குச் செல்லுகின்றது என்ற அடிப்படையில், இஸ்ரேலின் Operation Rising Lionஐ Decode செய்து வருகின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/sWA1vIU0nNY

NO COMMENTS

Exit mobile version