Home உலகம் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியை கொல்வோம் : இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் மிரட்டல்

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியை கொல்வோம் : இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் மிரட்டல்

0

ஈரான்(iran) உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியை(Ayatollah Ali Khamenei) படுகொலை செய்யப்போவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ்(Israel Katz) பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

 நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை தெற்கு இஸ்ரேலில் உள்ள ராமோன் விமானப்படை தளத்திற்கு விஜயம் செய்தபோது அவர் மேற்கண்ட மிரட்டலை விடுத்ததாக யெடியோத் அஹ்ரோனோத் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வாதிகாரி காமெனிக்கு ஒரு தெளிவான செய்தி

“நான் இங்கிருந்து சர்வாதிகாரி காமெனிக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்ப விரும்புகிறேன்: நீங்கள் இஸ்ரேலை தொடர்ந்து அச்சுறுத்தினால், எங்கள் நீண்ட கை மீண்டும் அதிக சக்தியுடன் தெஹ்ரானை அடையும் – இந்த முறை தனிப்பட்ட முறையில் உங்களுக்கும் கூட,” என தெரிவித்தார்.

இஸ்ரேல் அமைச்சரின் இந்த மிரட்டலுக்கு ஈரானிடமிருந்து உடனடியாக எந்த பதிலும் வெளிவரவில்லை. 

NO COMMENTS

Exit mobile version