Home உலகம் இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்: மீண்டும் பிணக்காடாக மாறும் காசா

இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்: மீண்டும் பிணக்காடாக மாறும் காசா

0

வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதல்களில் பத்திரிகையாளர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது  இஸ்ரேல் ராணுவத்தினால் நேற்று(15) மாலை வடக்கு காசாவில் பெய்ட் லாஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 2 பத்திரிகையாளர்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

டிரோன் தாக்குதல்

அத்துடன், தாக்குதலில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், சிலரின் நிலை தற்போது வரை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, நிவாரணப் பணியை மேற்கொண்டிருந்த அல்-கைர் அறக்கட்டளையைச் சேர்ந்த குழுவை டிரோன் குறிவைத்ததாகப் பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் அறிக்கை

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தனது அறிக்கையில் பெய்ட் லாஹியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளதுடன் இலக்கு வைக்கப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றும் டிரோன்களை இயக்க உபகரணங்களை சேகரித்து வந்தாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 1 ஆம் திகதி இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version