திருகோணமலை காளி அம்மன் கோயில் முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18.05.2025) மாலை 4 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
கலந்து கொண்டோர்
தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர்
மற்றும் மகளிர் அணியினர் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை
நடத்தினர்.
இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் உட்பட
கட்சியின் உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து
கொண்டனர்.
இதன்போது, இறுதி யுத்தத்தின் போது இனபடுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து
முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் இடம்பெற்றது.
