Home இலங்கை அரசியல் அரசாங்கம் குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள தமிழரசுக் கட்சி

அரசாங்கம் குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள தமிழரசுக் கட்சி

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில், இலங்கை அரசாங்கம்
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்
தவறிவிட்டதாக இலங்கைத் தமிழரசுக்கட்சி தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், பலமுறை உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும்,
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்தும் பயன்பாட்டில் உள்ளது எனவும் புதிய
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இப்போது முன்மொழியப்பட்டுள்ளது எனவும் தமிழரசுக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இணையப் பாதுகாப்புச் சட்டத்தை இரத்து செய்வதில் முன்னேற்றம் இல்லாததை
கண்டித்துள்ள தமிழரசுக்கட்சி, பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு எதிர்ப்பு உட்பட
பொறுப்புக்கூறல் வழிமுறைகளில் சர்வதேச ஈடுபாட்டை அரசாங்கம் நிராகரித்ததையும்
அந்தக்கட்சி குறை கூறியுள்ளது.

நியாயமற்ற முறை

யாழ்ப்பாணத்தின் செம்மணியில் 240 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதைப்
போன்ற மனித புதைகுழிகளின் விசாரணையில் வெளிநாட்டு நிபுணத்துவத்தைப் பெற
அரசாங்கம் தவறியதையும் தமிழரசுக்கட்சி கண்டித்துள்ளது.

இந்தநிலையில், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் ஏற்படும் தாமதங்களை
தமிழரசுக்கட்சி கண்டித்துள்ளது.
இதன் அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் பேசும் சமூகங்களின்
வாக்குரிமையை அரசாங்கம் நியாயமற்ற முறையில் மறுக்கிறது.

தேர்தல் செயன்முறையை மேலும் தாமதமின்றி மீட்டெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்
சாணக்கியன் சமர்ப்பித்த தனி ஆள் உறுப்பினர் யோசனையை
ஆதரிக்குமாறும் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version