Home இலங்கை சமூகம் வடமராட்சி கிழக்கிலும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு

வடமராட்சி கிழக்கிலும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு

0

யாழில் இலங்கை தமிழரசு கட்சியின் மாவீரர் பெற்றோர் உரித்துடையோரை கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி பொது மண்டபத்தில் முன்னாள் மாகாண சபை
உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலமையில் நேற்று (26) காலை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் முதல் நிகழ்வாக மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் மங்கல வாத்தியம்
முழங்க விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு பொதுச் சுடரினை உடுத்துறையை
சேர்ந்த மாவீரரின் தந்தை பொன் சிவலிங்கம் எற்றிவைத்ததை தொடர்ந்து
பொது ஈகைச்சுடரினை கட்டைக்காடு முள்ளியனைச் சேர்ந்த மாவீரர் கயல் மற்றும் கடல்
ஆகியோரின் தாயார் ஏற்றிவைத்தார்.

மாவீரர்கள் 

அதனை தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவ படங்களுக்கு மலர்மாலைகள்
அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மாவீர்களின் பெற்றோர்
உரித்துடையோர் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சி பதில் செயலாளர் எம் ஏ சுமந்திரன்,
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை
தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் உட்பட பலர் உரை நிகழ்த்தினர்.

இதில் மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர்கள், பருத்தித்துறை பிரதேச சபை
உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள், ஜநாயக தமிழ் தேசிய
கூட்டணி உறுப்பினர்கள், ஈழமக்கள் ஜனநாயக கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version