இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை புதிய அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகம் நேற்று(23) மன்னார்- தொடருந்து வீதி பிரதான வீதியில் கட்சியின் மன்னார் மாவட்ட தலைவர் ப.ஜே.குமார்
தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிய அலுவலகம்
கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் , இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் குறித்த அலுவலகத்தை வைபவ
ரீதியாக திறந்து வைத்தனர்.
இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள்,கட்சியின் மன்னார் மாவட்ட
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
