Home இலங்கை அரசியல் தமிழ்த் தேசிய கட்சிகளிடம் தமிழரசுக் கட்சி விடுத்துள்ள கோரிக்கை

தமிழ்த் தேசிய கட்சிகளிடம் தமிழரசுக் கட்சி விடுத்துள்ள கோரிக்கை

0

இனியாவது தமிழ்த் தேசிய கட்சிகள் அரசியல் தீர்வு விடயத்தில் இணைந்து பேச வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று (23.11.2025) மாலை ஊடகங்களுக்கு கருத்து
தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த காலத்தில் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் கூட்டாக செயற்பட எல்லா கட்சிகளுடன்
பேசினோம். எல்லோரின் வீடுகளுக்கும் தேடிப் போனேன். ஒருவரும் ஒத்துழைக்கவில்லை.

அரசியல் தீர்வு

பிரிக்கப்படாத நாட்டுக்குள் மீளப் பெற முடியாத அதிகாரப் பகிர்வில் சமஷ்டி
கட்டமைப்பை கொண்ட எந்த பெயரைக் கொண்ட தீர்வையும் நாம் ஏற்க தயார்.

ஒற்றையாட்சியை ஏற்கவுமில்லை. சமஷ்டியை கைவிடவுமில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கஜேந்திரனும் சொல்வது போல தமிழரசுக் கட்சி
தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யவில்லை.

கடல் வத்தும் கடல் வத்தும் என கொக்கு
குடல் வத்தி போக முடியாது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தங்களுடன் பேசியிருக்கலாமே என்கிறார்.

மாகாண சபையை
வேண்டாம் என சொல்பவரை எவ்வாறு அழைத்துச் செல்ல முடியும்.
அரசியல் தீர்வை அடைந்த பின்னர் ஏனைய பிரச்சினையை பார்க்கலாம் என்கிறார்.
அரசியல் தீர்வு வருவதற்குள் எல்லாம் முடிந்து விடும்” எனத் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version