முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குழப்பத்தில் முடிந்த யாழ் இசை நிகழ்ச்சி : கருத்து வெளியிட்ட அங்கஜன்!

யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் நடாத்தப்படுவதும், அதனூடாக நாட்டுக்குள் முதலீடுகள் கொண்டு வரப்படுவதும் வரவேற்கப்பட வேண்டிய விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமாநாதன் தெரிவித்துள்ளார். 

எனினும், இவ்வாறான நிகழ்வுகளின் ஏற்பாடு நடவடிக்கைகள் மூன்றாம் தரப்பினரால் மேற்கொள்ளப்படக் கூடாதென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்களில் நெகிழ்ச்சித்தன்மை இருக்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழப்ப நிலை

யாழில் நேற்று இடம்பெற்ற நிகழ்வுகளின் போது, குழப்ப நிலை ஏற்பட்டிருந்ததையடுத்து, இலங்கையிலும் இந்தியாவிலும் இது தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குழப்பத்தில் முடிந்த யாழ் இசை நிகழ்ச்சி : கருத்து வெளியிட்ட அங்கஜன்! | Jaffna Hariharan Concert Musical Show Issue Viral

"நன்றி யாழ்ப்பாணம்" ஹரிஹரனின் பதிவு

“நன்றி யாழ்ப்பாணம்” ஹரிஹரனின் பதிவு

இந்த நிலையில், இது தொடர்பில் அங்கஜன் இராமாநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”நேற்றைய நாளில் யாழ் முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற ஹரிஹரின் இசை நிகழ்ச்சி தொடர்பாக கலவையான விமர்சனங்களை இலங்கை, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் முன்வைப்பதை அவதானிக்க முடிகிறது.

நேற்றைய நிகழ்வில் இடம்பெற்ற அசாதாரண நிலை என்பது முறையான திட்டமிடல் செய்யப்பட்டிருந்தால் கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்திருக்கும் என பலர் குறிப்பிடுகிறார்கள்.

நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள், நுழைவுச்சீட்டுகளினால் ஏற்பட்ட குழப்பங்கள், பங்கேற்கும் கலைஞர்களில் இறுதி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள், மைதான ஏற்பாடுகள், பாதுகாப்பு சார் குறைபாடுகள் என பல்வேறு சர்ச்சைகள் நேற்றைய குழப்பத்தின் காரணிகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

விமர்சனங்கள்

மறுபக்கத்தில் நிகழ்வை பார்வையிடச் சென்ற மக்களை தரக்குறைவாக சித்தரிக்கும் வகையிலும் சிலர் விமர்சிக்கிறார்கள்.

குழப்பத்தில் முடிந்த யாழ் இசை நிகழ்ச்சி : கருத்து வெளியிட்ட அங்கஜன்! | Jaffna Hariharan Concert Musical Show Issue Viral

அதிபர் தேர்தல் : அரசாங்கத்தை ஆதரிக்க போவதில்லை என உதய கம்மன்பில உறுதி!

அதிபர் தேர்தல் : அரசாங்கத்தை ஆதரிக்க போவதில்லை என உதய கம்மன்பில உறுதி!

அவர்களில் சிலர் செய்த பிழைகளை ஒட்டுமொத்த யாழ்ப்பாண மக்கள் மீது திருப்புவதென்பது திட்டமிட்ட அரசியலாகவே தென்படுகிறது.

தவறிழைத்த மக்களை நான் கண்டிப்பதோடு, மண்ணிற்கு வருகை தந்திருக்கும் விருந்தினர்களை சங்கடப்படுத்தாமல் பார்த்துக் கொள்வதும் எமது மரபுசார் பண்பாடு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக்ரோசமான மனநிலை

ஆக்ரோசமான மனநிலையில் இருக்கும் மக்களை கையாள்வது என்பது தனித்துவமான ஆளுமைத்திறன்.

குழப்பத்தில் முடிந்த யாழ் இசை நிகழ்ச்சி : கருத்து வெளியிட்ட அங்கஜன்! | Jaffna Hariharan Concert Musical Show Issue Viral

வெளிநாட்டு முதலீடுகள் : ஜே.வி.பியின் நிலைப்பாடு!

வெளிநாட்டு முதலீடுகள் : ஜே.வி.பியின் நிலைப்பாடு!

அதிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் முற்பதிவு செய்துள்ளார்கள் எனத்தெரிந்திருந்த போது அதற்கான ஏற்பாடுகள் மிகக்கச்சிதமாக செய்யப்பட்டிக்க வேண்டும்.

யாழ். மாநகரசபை, காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைவரும் கூடுதல் பொறுப்போடு நடந்திருக்க வேண்டும்.

அவர்களுக்கான சரியான தகவல்களை ஏற்பாட்டாளர்கள் வழங்குவதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட மாணவர்கள்

ரசிகர்களை கட்டுப்படுத்தும் பணிகளில் மாணவர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக அறிந்து கொண்டேன்.

குழப்பத்தில் முடிந்த யாழ் இசை நிகழ்ச்சி : கருத்து வெளியிட்ட அங்கஜன்! | Jaffna Hariharan Concert Musical Show Issue Viral

அரச ஊழியர்களின் முழுமையான சம்பள உயர்வு! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களின் முழுமையான சம்பள உயர்வு! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

முன் அனுபவம் இல்லாத மாணவர்களைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கையாள எடுக்கப்பட்ட முடிவு என்பது மிகவும் ஆச்சரியமானதாகவும் தவறான முன்னுதாரணமாகவும் அமைகிறது.

ஏற்பாடுகளில் செய்யப்படும் தவறுகள் பெரு நிகழ்ச்சியொன்றின் முடிவை முற்றிலுமாக மாற்றிவிடும் என்பதற்கு நேற்றைய இசைநிகழ்ச்சி ஓர் உதாரணமாகி விட்டது என்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளியிடப்பட்ட கருத்துகள்

அத்தோடு, நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் சார்பில் ஊடகங்களில் வெளியிடப்பட்ட கருத்துகள், குறிப்பாக “யாழ்ப்பாணம் வர யாருக்கும் விருப்பமில்லை. நாம் சமாளித்து வர வைத்துள்ளோம்” போன்ற கருத்துகளின் தாக்கமும் நேற்றிரவு நடந்த நிகழ்வில் தாக்கத்தை செலுத்தியிருக்க வாய்ப்புகள் உள்ளன.

குழப்பத்தில் முடிந்த யாழ் இசை நிகழ்ச்சி : கருத்து வெளியிட்ட அங்கஜன்! | Jaffna Hariharan Concert Musical Show Issue Viral

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்! நாடு திரும்பினார் பசில்

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்! நாடு திரும்பினார் பசில்

அவர்கள் சொல்ல வந்த கருத்து வேறாக இருக்கலாம், பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் தொனிகள் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத்துக்கு நல்ல விடயங்களை செய்ய வேண்டும் என்ற பெரு விருப்பம் கொண்டுள்ள சகோதரர் இந்திரன் பத்மநாதன் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஊடக சந்திப்பு

அதேவேளை, தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் ஊடகங்கள் நேற்றைய நிகழ்வுகளை வைத்து யாழ்ப்பாண மக்களை பற்றிய தவறான அபிப்பிராயங்களை கட்டமைக்க முன்பாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் ஊடக சந்திப்பொன்று நடாத்தப்பட்டு விளக்கம் கொடுக்க வேண்டியதும் அவசியமாகும்.

குழப்பத்தில் முடிந்த யாழ் இசை நிகழ்ச்சி : கருத்து வெளியிட்ட அங்கஜன்! | Jaffna Hariharan Concert Musical Show Issue Viral

இந்தியாவை ஆத்திரமூட்டும் சீனக்கப்பல்கள்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரணில்

இந்தியாவை ஆத்திரமூட்டும் சீனக்கப்பல்கள்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரணில்

இத்தகைய இசை நிகழ்வுகள் எதிர்காலத்தில் இடம்பெற இத்தகைய பொறுப்புக்கூறல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

யாழ்ப்பாணத்தையும் அதன் மக்களையும் தவறானவர்களாக சித்தரிக்கும் வாய்ப்புகளை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் எவரும் மேற்கொள்ள கூடாது. எமது தவறுகளை இனங்கண்டு சுய ஒழுக்கத்தை மேம்படுத்த வேண்டியதும் அவசியம்.

எதிர்கால நிகழ்வுகள்

இதனைப்போல பெருமளவில் மக்கள் ஒன்றுகூடும், இந்திர விழா, வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா, ஆலய விழாக்கள் உள்ளிட்டவற்றில் கண்ணியத்தோடு செயற்பட்டவர்கள் எம்மக்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

குழப்பத்தில் முடிந்த யாழ் இசை நிகழ்ச்சி : கருத்து வெளியிட்ட அங்கஜன்! | Jaffna Hariharan Concert Musical Show Issue Viral

ஆகவே நேற்றைய நாளில் இடம்பெற்ற தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என துறைசார்ந்தவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இதுவல்ல யாழ்ப்பாண மக்களின் அடையாளம்” என கூறியுள்ளார்.

இலங்கையில் முக்கிய விமான நிலையங்களை குறிவைக்கும் இந்திய நிறுவனம்!

இலங்கையில் முக்கிய விமான நிலையங்களை குறிவைக்கும் இந்திய நிறுவனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்