யாழ். கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர், வாந்தி
எடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் இன்றையதினம்(11.05.2025) சம்பவித்துள்ளது.
நீர்வேலி – பூதர்மடை ஒழுங்கை சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார்.
இதய நோய் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று
பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
