Courtesy: பூ.லின்ரன்
பருத்தித்துறை நகரசபையின் புதிய சந்தை இன்று மதியம் 12 மணியுடன்
மூடப்பட்டுள்ளது.
புதிய சந்தையில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக நேற்றைய தினம்
வியாபாரிகள் பருத்தித்துறை நகரிலுள்ள நவீன சந்தை தொகுதிக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் நேற்று பருத்தித்துறை தவிசாளர் தலைமையில் 8 நகரசபை உறுப்பினர்களுடன்
பருத்தித்துறை வர்த்தகர்களுக்கும் இடையில் அவசர கூட்டம் நடாத்தப்பட்டது.
பல்வேறு குறைபாடுகள்
அதில்
வர்த்தகர்கள் புதிய சந்தைக்கு சென்று வியாபாரம் செய்ய மாட்டோம் என
விடாப்பிடியாக நின்ற நிலையில் இன்று மதியம் 12 மணியுடன் புதிய சந்தை மழைக்காலம் முடியும் வரை தற்காலிகமாக நவீன சந்தை தொகுதியில் இயங்கவுள்ளது.
இதேவேளை யாராவது தமது வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் தாம்
தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்போம் என வியாபாரிகள் மண்ணெண்ணெயுடன் வியாபார
நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
