இந்தியாவின் விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 பாடல் போட்டியில் பங்குபற்றிய யாழ். கொக்குவிலை சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா, தாய்நாடு திரும்பியுள்ளார்.
பலாலி விமான நிலையம்
ஊடாக இன்றையதினம்(22.05.2025) அவர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
இதன்போது, ஒன்றுகூடிய மக்கள் அவருக்கு பொன்னாடை போர்த்து கௌரவித்து வரவேற்பு
செய்துள்ளனர்.
கௌரவிப்பு நிகழ்வு
பின்னர் வாகனங்கள் அணிவகுத்து வர சொந்த ஊருக்கு காரில் அழைத்து
வரப்பட்டுள்ளார்.
அதன்பின்னர், அவரது ஊரான கொக்குவில் பகுதியில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றும்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் – கஜிந்தன்
