Home இலங்கை சமூகம் யாழில் வர்த்தக ஸ்தாபனம் நஷ்டமடைந்தமையால் உரிமையாளர் உயிர்மாய்ப்பு

யாழில் வர்த்தக ஸ்தாபனம் நஷ்டமடைந்தமையால் உரிமையாளர் உயிர்மாய்ப்பு

0

யாழ்ப்பாணத்தில் புகைப்பட நிறுவனம் ஒன்று நஷ்டமடைந்தமையால் அதன் உரிமையாளர்
நேற்றுமுன்தினம்(23) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த புலவர் ரமேஷ்குமார் (43) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிர்மாய்ப்பு

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்றுமுன்தினம் மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு இரவு 10.30
மணிக்கு வீடு வந்துள்ளார்.

வீடு வந்தவர் மேல் மாடிக்கு சென்ற நிலையில் இந்நிலையில் அவரது மனைவி இரவு 11 மணியளவில் உணவு கொண்டு சென்றவேளை அவர்
தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர்
ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்
மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version