Home இலங்கை சமூகம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழு விஜயம்

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழு விஜயம்

0

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள்
அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) விஜயம் செய்துள்ளனர்.

குறித்த குழுவினர் இன்று (17)  விஜத்தினை மேற்கொண்டுள்ளனர். 

இதன்போது, அமைச்சர் வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்றையும் நாட்டி வைத்துள்ளார்.

குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம்

இதனையடுத்து, விடுதிகள் சத்திரசிகிச்சை பிரிவுகளையும் பார்வையிட்டதோடு யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையின் அரும்பொருட் காட்சியகத்தையும் பார்வையிட்டுள்ளார்.

அத்தோடு குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு வழங்கி வைத்துள்ளார்.

அமைச்சரின் இந்த விஐயத்தின் போது சுகாதார அமைச்சின் செயலாளர் RD.P.G.மகிபால (rd.p.g.Mahipala) மற்றும் Dr.அசேல குணவர்த்தன (Dr. Asela Gunawardena) நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன் (Angajan Ramanathan) ,
தர்மலிங்கம் சித்தார்தன் (Dharmalingam Siddarthan), யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்
த.சத்தியமூர்த்தி வைத்தியசாலையின் அதிகாரிகள் பணியாளர்கள் எனப் பலரும்
கலந்து கொண்டிருந்தனர்.

Source: https://ibctamil.com/article/jaffna-teaching-hospital-visit-ramesh-pathirana-1721197867

NO COMMENTS

Exit mobile version