Home இலங்கை சமூகம் காங்கேசன்துறை – அநுராதபுரம் இடையிலான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறை – அநுராதபுரம் இடையிலான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்

0

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, அநுராதபுரத்திற்கு இடையேயான தொடருந்து சேவைகள் நாளை (22.12.2025) முதல் மீண்டும் தொடங்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, தொடருந்து அநுராதபுரத்திலிருந்து மாலை 2.30 மணிக்கு காங்கேசன்துறை நோக்கி புறப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

  

புனரமைப்பு பணிகள்  

அதேபோல், வழமை போன்று காங்கேசன்துறையில் இருந்து காலை 6 மணிக்கு அநுராதபுரம் நோக்கி புறப்படும்.

எனினும், தாண்டிகுளம் தொடருந்து நிலையம் புனரமைப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக தொடருந்து நிறுத்தப்படாது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version