Home இலங்கை சமூகம் யாழில் குறுக்கும் மறுக்குமாக பயணித்த பேருந்து – சமூக ஊடகங்களில் கடும் விசனம்

யாழில் குறுக்கும் மறுக்குமாக பயணித்த பேருந்து – சமூக ஊடகங்களில் கடும் விசனம்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தனியார் பேருந்து ஒன்று வீதி விதிமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தது தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவலாக காணொளிகள் பகிரப்பட்டு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வழித்தடத்தில் நேற்று (28.12.2024) இடம்பெற்றுள்ளது.

29 ශ්‍රී 7911 என்ற பதிவு இலக்கத்தை கொண்ட பேருந்தே இவ்வாறு வீதியில் ஆபத்தான
முறையில் பயணித்துள்ளது.

கடுமையான நடவடிக்கை

பின்னால் வரும் வாகனத்துக்கு வழி விடாமல் வீதியின் குறுக்கும் மறுக்குமாக பேருந்தானது பயணத்தில் ஈடுபட்டுள்ளது.

பயணிகள் மத்தியிலும் வீதியில் பயணித்தவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த காணொளியானது சமூக ஊடகங்களில் வைரலாகும் நிலையில் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

வடக்கு மாகாண ஆளுநர் 

இந்நிலையில், இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறான சாரதிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, வடக்கு மாகாண
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் க.மகேஸ்வரனை வடக்கு மாகாண ஆளுநர்
அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கு அமைவாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

செய்திகள் – கஜிந்தன்

NO COMMENTS

Exit mobile version