Home இலங்கை சமூகம் யாழ். பல்கலை நுழைவாயில் முன் வெடித்த போராட்டம்

யாழ். பல்கலை நுழைவாயில் முன் வெடித்த போராட்டம்

0

தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்றையதினம் (22.12.2025) யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக நடைபெற்றுள்ளது.

தமிழர் தாயகம் மீது பௌத்த ஆக்கிரமிப்புகளை நிறுத்த கோரியும் தமிழர் கலாச்சார அழைப்பினை தடுக்க கோரியும், வடக்கு கிழக்கில் அத்துமீறிய பௌத்த சின்னங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

ஆக்கிரமிப்புகளை உடனே நிறுத்து

இதன்போது தமிழர் தாயகம் எங்கள் சொத்து, தையிட்டி
தமிழர் சொத்து பௌத்த ஆக்கிரமிப்புகளை உடனே நிறுத்து போன்ற கோசங்களும்
எழுப்பப்பட்டது.

அத்துடன் நேற்றைய தினம் தையிட்டியில் காவல்துறையினரால் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/zqEItknwOcs

NO COMMENTS

Exit mobile version