Home உலகம் 2025 இறுதிக்குள் 10 லட்சம் பேரை இழக்கப்போகும் நாடு

2025 இறுதிக்குள் 10 லட்சம் பேரை இழக்கப்போகும் நாடு

0

ஜப்பான் நாட்டில் மக்கள் தொகை அண்மை ஆண்டுகளில் வேகமாக சரிந்து வரும் நிலையில், 2025 இறுதிக்குள் 10 லட்சம் பேரை இழந்துவிடும் என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.

 மேலும், மக்கள் தொகை பிரச்சனையை சமாளிக்க செய்யறிவுதான் ஒரே வழியாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

ஜப்பானின் குறைந்துவரும் மக்கள் தொகை

ஜப்பானில், பிறப்பு விகிதத்துக்கும் இறப்பு விகிதத்துக்கும் உள்ள வேறுபாட்டை குறிப்பிட்டு அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

ஜப்பானின் குறைந்துவரும் மக்கள் தொகையானது கவலைதரும் சவாலான விஷயமாகவே உள்ளது. மருத்துவ செலவினங்கள், சமூக சேவை தொடர்பான அழுத்தங்களால், மக்கள் தொகை குறைவதால், தொழிலாளர் வளம் குறையும், புவியியல் அமைப்பில் மாற்றம் ஏற்படும். எனவே, இங்கு பிரச்னைகளை கையாள செய்யறிவுதான் மிக முக்கியப் பங்கு வகிக்கும். மக்கள் தொகை வீழ்ச்சியால் ஏற்படும் பொருளாதார மற்றும் சமூகத்தின் மீதான தாக்கங்களை செய்யறிவு தடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 வயது முதுமை காரணமாக அதிக இறப்பு

ஜப்பானில் ஏற்பட்டிருப்பது ஏதோ திடீரென உருவான பிரச்னை அல்ல. அங்கு அரை நூற்றாண்டு காலமாகவே மக்கள் தொகை சரிந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த சில வருடங்களில், ஜப்பான் மக்கள் தொகை எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்தது என்பதை அரசும், ஊடகங்களும் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது, ஜப்பானில் மிகக் குறைந்த அளவில் குழந்தைகள் பிறப்பும், வயது முதுமை காரணமாக அதிக இறப்புகளும் கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே பதிவாகி வருகிறது.

NO COMMENTS

Exit mobile version