Home அமெரிக்கா அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய்

0

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், தற்போது தீவிரமான Prostate வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

புற்றுநோய், பைடனின் எலும்புகளுக்கும் பரவி விட்டதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அதிகாரபூர்வ மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 புற்றுநோய் பாதிப்பு

மருத்துவர்களின் அறிக்கையின்படி, பைடனின் நிலை மிக மோசமானது என்றும், தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சிகிச்சையில் வைத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் வெளிவந்ததிலிருந்து, பைடன் ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் வளாகங்கள் பெரும் கவலையுடன் இருக்கின்றனர். அவருக்காக பலர் வேண்டுதல், பிரார்த்தனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version