படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை வவுனியா
ஊடகவியலாளர்களால் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை நேற்று (10.09.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பலர் பங்கேற்பு
வவுனியா – இலுப்பையடி பகுதியில் வைத்து பொதுமக்கள், வர்த்தகர்கள், சாரதிகள்
ஆகியோருக்கு இவ்வறிக்கை விநியோகிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை அறிக்கை
மற்றும் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பான
தகவல்களை உள்ளடக்கிய குறித்த அறிக்கை விநியோகிக்கப்பட்டது.
இதில் வவுனியா ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
