ஜே.வி.பி என்ற மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின்
சில்வா,தமது கட்சிக்கும், சிபிசி என்ற சீன கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான உறவுகளை
ஆழப்படுத்தும் முகமாக சீனாவில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கம்,இந்தியாவுடன் பாதுகாப்பு
உடன்படிக்கைகளை செய்து கொண்டதன் பின்னர், இடம்பெற்ற இந்த சீனப் பயணம்
முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த
பயணத்தின்போது, டில்வின் சில்வா, கம்யூனிஸக்கட்சியின் முக்கியஸ்தர்களை
சந்தித்தார்.
சீனாவுடனான தொடர்பு
எனினும் சந்திப்பின்போது பகிர்ந்து கொள்ளப்பட்ட விடயங்கள் எவையும் வெளிச்சத்து
வரவில்லை.
ஜே.வி.பிக்கு சீனாவுடனான தொடர்புகள், கட்சியின் நிறுவனர் ரோஹண விஜேவீரவின்
காலத்தில் இருந்து தொடர்கின்றன.
1971 ஜே.வி.பி கிளர்ச்சிக்குப் பின்னர், சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான
அப்போதைய அரசாங்கம், குறித்த கிளர்ச்சிக்கு பின்னால், சீனாவின் பங்கு
இருப்பதாக சந்தேகித்து கொழும்பில் உள்ள சீன ஆதரவு வட கொரிய தூதரகத்தை மூடியது.
அத்துடன், இலங்கையில் சீன செய்தி நிறுவன அலுவலகம் மற்றும் சீன பொறியாளர்கள்
மற்றும் தொழிலாளர்கள் ஒரு திட்டத்தில் இருந்த பண்டாரநாயக்க நினைவு தளம் ஆகியவை
சோதனை செய்யப்பட்டு, மாவோ சேதுங்கின் நூற்றுக்கணக்கான புத்தகங்களும் அவரது
படங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவங்களை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவரும் பொதுச்
செயலாளருமான தலைவருமான என். சண்முகதாசன் தமது நினைக்குறிப்பு ஒன்றில்
எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
